Tuesday, June 18, 2013

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பொது அறிவு - தொடர் -03

01. பூமி தன்னைத்தானே சுற்றுவதால் ஏற்படுவது? இரவு, பகல்
02. சூரியனைக் னோள்கள் சுற்றும் பாதையை எவ்வாறு அழைப்பர்? புவி
      ஒழுக்குப் பாதை
03. முஸ்லிம்கள் வழிபாடு செய்யும் தலம்? பள்ளிவாசல்
04. உலகத்தை சுற்றி வந்தவர்?  மகலன்
05. எஸ்கிமோவர் எங்கு வசிக்கின்றனர்? துருவப் பிரதேசத்தில்
06. கோள்கள் எதிலிருந்து ஒளியைப் பெறுகின்றன?  சூரியனிலிருந்து
07. பூமியின் துணைக்கோள் எது? சந்திரன்
08. சூழல் மாசடையும் வழியள் 3 தருக?
      1.தொழிற்சாலை இயங்குதல்
      2. வாகான ஓட்டத்தால்
      3. மரங்கள் அழிந்து போவதால்
09. இலங்கையின் பணப்பயிர்கள் எவை? தேயிலை, இறப்பர், தென்னை
10. சீனாவின் தலைநகரம் எது? பீஜிங்
11. மூவகைப் போக்குவரத்து பாதைகள் எவை? தரை, வான், கடல்
12. அமெரிக்காவை கண்டு பிடித்தவர்? கொலம்பஸ்
13. இலங்கையின் இலவச கல்வியின் தந்தை? C.W.W.கன்னங்கரா
14. வளிமண்டலத்தில் உள்ள முக்கிய வாயுக்கள் எவை? ஒட்சிசன்,
      நைதரசன், காபனீரொட்சைட்டு
15. உலகின் மிகப் பெரிய தீவு?    கிறீன்லாந்து
16. கிறீன்விச் நேரத்திற்கும் இலங்கையின் இன்றைய நேரத்திற்கும் உள்ள
      வித்தியாசம் என்ன? 5மணி 30 நிமிடம்
17. நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு?  நோர்வே
18. துருவப் பிரதேசத்தில் வாழும் மிருகம்?   துருவக்கரடி, மீன், சீல் மீன்
19. ஓசோன் படையில் துவாரம் ஏற்படுத்தும் வாயு?  குளோரோ புளோரோ
      காபன்(CFC)
20. இரண்டு முகில்கள் மோதும் போது பிறப்பவை?   இடி, மின்னல்
21. புவி மேற்பரப்பு அசைவதனை எவ்வாறு அழைப்பர்?   புவி நடுக்கம்,
      பூகம்பம்
22. தேசியக் கொடியில் காணப்படும் நிறங்கள் எவற்றைக் குறிக்கும்?
      சிவப்பு – சிங்களவர்
      செம்மஞ்சள் – தமிழர்
      பச்சை – முஸ்லிம்                                                                                                                                          
23. இந்து சமுத்திரத்தின் முத்து என்று அழைக்கப்படும் நாடு?    இலங்கை
24. இலங்கையின் அரச இலட்சணையில் அடங்கும் உருவங்கள் எவை?
                  
      வாளேந்திய சிங்கம் , பூரண கும்பம்
      சூரியனும் சந்திரனும் , தானியக் கதிர்                                                        
      தர்மச் சக்கரம் - தாமரை, இதழலங்காரம்
25. இலங்கையின் அரச இலட்சணை சட்டபபூர்வமாக யாருடைய பொறுப்பில்
      உள்ளது?  ஜனாதிபதியின் பொறுப்பில்

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பொது அறிவு - தொடர் -02

01. கணவனை இழந்தவள்?   விதவை
02. மனைவியை இழந்தவன்?  தபுதாரன்
03. இலங்கையின் முதல் பெண் பிரதமர்?  சிறிமாவோ பண்டாரநாயக்கா
04. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி? மகிந்த ராஜபக்ச
05. பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரி?   பொலிஸ் மா அதிபர்
06. இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத் தாபனத்தை குறிக்கும் ஆங்கில எழுத்து?
      S.L.B.C
07. இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தை குறிக்கும் ஆங்கில எழுத்து?
      S.L.R.C
08. கப்பலில் பொருட்களை ஏற்றி இறக்கும்;  பணியில் ஏற்படும் நிறுவனம் ?
      இலங்கைத் துறைமுக அதிகாரசபை
09. கண்டு பிடிப்புக்கள்
      தொலைக்காட்டி – கலிலியோ கலிலி
      தொலைபேசி – கிரகம்பெல்    
      தொலைக்காட்சி – சுவாரிகின்                                                            
      வானொலி – மார்க்கோணி                                                              
      ஆகாய விமானம் - ரைட் சகோதரர்கள்                                                    
      துவிச்சக்கர வண்டி – கேக் பற்றிக் மைக்மிலன்                                                    
      மண் விளக்கு – தோமஸ் அல்வா எடிசன்
10. நெல்லின் இலை ?  தாள்
11. தசரதனின் மனைவியர்? கைகேயி , சுமித்திரை, கோசலை
12. இராமனனின் தாய்?  கோசலை
13. இலங்கையின் சர்வதேச விமான நிலையம்?  பண்டார நாயக்க விமான
      நிலையம்
14. இலங்கையின் விமான நிலையத்திற்கு முன்னர் வழங்கிய பெயர்? கட்டு
      நாயக்க விமான நிலையம்
15. U.C குறிப்பது ? நகரசபை
16. C.E.B குறிப்பது? இலங்கை மின்சார சபை
17. S.L.T.B குறிப்பது? இலங்கை மத்திய போக்குவரத்துச் சபை
18. சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள இடம்?  காங்கேசன்துறை,
      திருகோணமலை, புத்தளம்
19. உப்பளங்கள் அமைந்துள்ள இடம்? புத்தளம், ஆணையிரவு, நிலாவெளி
20. வீடு வாசல் இழந்தவர்கள்?  அகதிகள்
21. தாய் தந்தை இழந்தவர்? அநாதை
22. நெம்புக் கோலின் பிரதான பகுதிகள்?  பொறுதி, சுமை, எத்தனம்,
      பொறுதிப்புயம்
23. மனிதனின் அத்தியவசிய தேவைகள்?   உணவு, உடை,  உறையுள்
24. தாவரத்தின் இனப்பெருக்கப் பகுதி? பூ
25. வெப்ப வலயத்தில் மக்கள் உடுத்தும் உடை? பருத்தி ஆடை

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பொது அறிவு - தொடர் -01

01. வளையமுள்ள கோள் எது? சனி
02. செங்கோள் எது? செவ்வாய்
03. மிகச் சிறிய கோள் எது? வெள்ளி
04. மிகப் பெரிய கோள் எது? வியாழன்
05. சூரினைச் சுழவுள்ள கோள்கள் எத்தனை?  09
06. உலகில் சனத்தொகை கூடிய நாடு எது?  சீனா
07. சந்திரனில் முதல் முதல் காலடி எடுத்து வைத்தவர் ?  நீல் ஆம்ஸ்ரோங்
      1969.07.21
08. தீவு என்பது ? நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டது.
09. குடா என்பது? மூன்று பக்கமும் தரையால் சூழப்பட்டது.
10. சாரண இயக்கத்தின் தந்தை யார்?  பேடன் பவல் பிரபு
11. சாரண தந்தை எந்த நாட்டைச் சேர்ந்தவர்?  இங்கிலாந்து
12. கிராமம் அல்லது ஒரு பகுதியில் பொறுப்பு வாய்ந்த அதிகாரி யார்?  கிராம
      சேவை உத்தியோகத்தர்
13. உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் தற்போது – பிரதேச செயலாளர்
      அலுவலகங்களாக மாற்றப்பட்டுள்ளன.
14. உதவி அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் என
      அழைக்கப்படுகின்றார்கள்.
15. கடலும் கடல் சார்ந்த பிரதேசம்  - நெய்தல் நிலம்
16. மலையும் மலை சார்ந்த பிரதேசம் - குறிஞ்சி நிலம்
17. காடும் காடு சார்ந்த பிரதேசம்     - முல்லை நிலம்
18. வயலும் வயல் சார்ந்த பிரதேசம்  - மருதம் நிலம்
19. மணலும் மணல் சார்ந்த பிரதேசம் - பாலை நிலம்
20. எட்டு விடயங்களை ஒரே நேரத்தில் அவதானிப்பவர் ?  அட்டவதானி
21. ஐந்து விடயங்களை ஒரே நேரத்தில் அவதானிப்பவர்?  பஞ்சவதானி
22. ஓன்பது விடயங்களை ஒரே நேரத்தில் அவதானிப்பவர்? நவதானி
23. பத்து விடயங்களை ஒரே நேரத்தில் அவதானிப்பவர் ? தசவதானி
24. நூறு விடயங்களை ஒரே நேரத்தில் அவதானிப்பவர் ?  சதாவதானி
25. இலங்கையில் பௌத்த மதத்தைப் பரப்பியவர்?   மகிந்ததேரர்